செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’

By KU BUREAU

இயக்குநர் செல்வராகவன் ‘7G ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ படங்களின் அடுத்தப் பாகத்தை இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அவர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ‘மெண்டல் மனதில்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் நேற்று வெளியிட்டார்.

செல்வராக வனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இப்போது மீண்டும் இதில் இணைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE