யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ படம் மூலம் கவனிக்கப்பட்டவர் மடோன் அஸ்வின். அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படத்தை இயக்கினார். இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். அவரின் 63-வது படமான இதை, சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். “உலகளாவிய பார்வையாளர்களைக் கவரும் வகையில் தரமான படத்தை வழங்கும் உறுதியுடன் இந்த பயணத்தைத் தொடங்குகிறோம்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.