அரசியலில் நுழையும் நடிகர் அல்லு அர்ஜூன்?

By KU BUREAU

நடிகர் அல்லு அர்ஜூன் விரைவில் அரசியலில் நுழைய இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. இதுபற்றி, அல்லு அர்ஜூன் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் ‘புஷ்பா2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது. படம் வெளியாகி ஒரே வாரத்தில் ரூ. 1000 கோடி வசூலைப் பெற்றிருப்பதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பான் இந்திய அளவில் வெளியான இந்தப் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இதில் அல்லு அர்ஜூன் பேசியபோது, இந்த வசூல் அனைத்து ரசிகர்களின் அன்பு எனவும் இன்னும் மூன்றே மாதத்தில் இந்த வசூல் சாதனையை தானே முறியடிப்பேன் எனவும் பேசினார்.

இந்த நிலையில், அல்லு அர்ஜூன் அரசியலில் நுழைய இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. இதுபற்றி, அல்லு அர்ஜூன் தரப்பு தெளிவுப்படுத்தியுள்ளது. இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்ற பொய்யான செய்தி எனவும் இதுபோன்று இனி செய்திகளை பரப்ப வேண்டாம் என அல்லு அர்ஜூன் தரப்பு தெளிவுப்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE