நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துலக் (26) போதைப்பொருள் வழக்கில் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். விஷூவல் கம்யூனிகேஷன் மாணவரான இவர் தற்போது சினிமாவில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.
சென்னை முகப்பேறு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயிலும் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கிவந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
மேலும், இதில் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துலக் செல்போன் எண்ணும் இருப்பது தெரிய வந்திருக்கிறது. நுங்கம்பாக்கத்தில் வீட்டில் இருந்த அலிகான் துலக்கை தனிப்படை காவல்துறையினர் நேற்று கைது செய்திருக்கின்றனர். காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
» சத்ரபதி சிவாஜியாக ரிஷப் ஷெட்டி: முதல் தோற்றம் வெளியீடு
» நேரில் சென்று நிவாரணப் பொருட்கள் கொடுக்காதது ஏன்? - விஜய் மீது வெடித்த விமர்சனம்