அதிர்ச்சி...பிக்பாஸ்8 குழுவில் ஒருவர் தற்கொலை!

By KU BUREAU

பிக்பாஸ்8 சீசனில் பணிபுரிந்த அசோசியேட் இயக்குநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் 50 நாட்களைக் கடந்து வருகிறது. இந்த சீசன் ஆரம்பம் முதலே சலிப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக இணையத்தில் சொல்லி வருகின்றனர். இதில் கடந்த வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்த சிவகுமார் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆண்கள் vs பெண்கள் என இருந்த டீமும் கலைக்கப்பட்டு தற்போது எல்லோரும் தனிப்பட்ட முறையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிக்பாஸ்8 சீசனில் அசோசியேட் இயக்குநராகப் பணிபுரிந்த ஸ்ரீதர் என்பவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த தற்கொலைக்கு என்ன காரணம் என்பதை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். பிக்பாஸ் குழுவில் முக்கிய நபராக இருந்த ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE