கன்னட நடிகை ஷோபிதா தற்கொலை!

By KU BUREAU

கன்னட நடிகை ஷோபிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னடத்தில் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வந்தவர் ஷோபிதா (30). இந்நிலையில் நேற்று நடிகை ஷோபிதா தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷோபிதா. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், நடிகை ஷோபிதா தனது கணவருடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகியவர் அதன் பின்னர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் அவரது வீட்டில் நடிகை ஷோபிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், நடிகை ஷோபிதாவின் உடலைபிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து, நடிகை ஷோபிதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறுதிசடங்கிற்கு அவரது உடல் பெங்களூரு கொண்டு செல்லப்பட இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE