நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்

By KU BUREAU

சென்னை: நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்.

நடிகை சமந்தாவின் தனதை ஜோசப் பிரபு இன்று காலமானார். தனதையின் மறைவு குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘நாம் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் வரை’ என இதயம் நொறுங்கியுள்ள எமோஜியைப் பகிர்ந்துள்ளார். தெலுங்கு- ஆங்கிலோ இந்தியனான ஜோசப் பிரபு உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் எனத் தெரிகிறது. ஆரம்பத்தில் பல இந்திய பெற்றோரைப் போலவே சினிமாவில் தன்னை அனுப்புவதற்கு தனது தந்தை யோசித்தார் என்று முன்பு பேட்டிகளில் பகிர்ந்திருக்கிறார் சமந்தா.

நாகசைதன்யாவுடனான விவாகரத்திற்குப் பிறகு மையோசிடிஸ் உடல்நலக் குறைவு, சினிமாவில் ஒதுங்கி இருந்தது என அடுத்தடுத்து சிக்கல்கள் வந்து கொண்டிருக்கிறது. இப்போது அவருடைய அப்பா மறைவும் அடுத்த இடியாக இறங்கியிருக்கிறது. சமந்தாவிற்கு ரசிகர்கள் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE