சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலை அறிவித்துள்ளார்.
பல வருடங்களாக காதல் வதந்தியில் சிக்கி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதுபற்றி, பல்வேறு தருணங்களில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது பெற்றோரும் மறுத்து வந்தாலும், சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட நண்பரை திருமணம் செய்ய இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்த விஷயத்தை கீர்த்தி சுரேஷ் தற்போது உறுதி செய்திருக்கிறார்.
இதனை, தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து அந்தோணி என்பவரை கடந்த 15 வருடங்களாகக் காதலித்து வருவதாகவும் இந்தக் காதல் இன்னும் பல வருடங்களுக்குத் தொடரும் என்றும் கூறியிருக்கிறார். அந்தோணி கொச்சி மற்றும் துபாயில் தொழிலதிபராக இருக்கிறார். பல ஆண்டுகளாக தங்கள் காதலை ரகசியமாக வைத்திருந்த இந்த ஜோடி இரு தரப்பினர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததால் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். அடுத்த மாதம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கோவாவில் திருமணம் என்று செய்தி வருகிறது. இதனை விரைவில் கீர்த்தி சுரேஷ் உறுதி செய்வார் என எதிர்பார்க்கலாம்.