நடிகை நயன்தாராவை அடுத்து நாகசைதன்யாவின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாராவின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கியது. இதற்காக நயன்தாரா- விக்னேஷ்சிவன் ஜோடிக்கு ரூ.25 கோடி நெட்ஃபிலிக்ஸ் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
நயன்தாராவின் பிறந்தநாளான கடந்த 18ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்போது நயன்தாராவை அடுத்து நடிகர்கள் நாகசைதன்யா- ஷோபிதாவின் திருமண நிகழ்வை ஸ்ட்ரீம் செய்யும் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் வாங்கியிருக்கிறது.
நாகசைதன்யா திருமணம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த திருமண நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்காக நாகசைதன்யா ஜோடிக்கு நெட்ஃபிலிக்ஸ் ரூ.50 கோடி வழங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்து நெட்ஃபிலிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.
» “நான் அரசியலுக்கு வந்திருந்தால் எல்லாவற்றையும் இழந்திருப்பேன்” - ரஜினி பேச்சு
» ‘சினிமாவை விட்டு விட்டு அரசியலை மட்டும் பாருங்கள்’ - ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள்