ஐயப்ப பக்தர்களை சீண்டிய இசைவாணி: இயக்குநர் ரஞ்சித் மீது வழக்கு!

By KU BUREAU

ஐயப்ப பக்தர்களை சீண்டும் விதமாக இசைவாணி பாடியிருக்கும் பாடல்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை அடுத்து இசைவாணி மீதும் இயக்குநர் ரஞ்சித் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கானா பாடகியாக பிரபலமானவர் இசைவாணி. இந்த பிரபல்யத்தைப் பயன்படுத்தி பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக முன்பு நுழைந்தார். இப்போது சினிமா, தனியிசை பாடல்கள் என பிஸியாக வலம் வருகிறார். இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒவ்வொரு வருடம் டிசம்பர் மாதத்திலும் மார்கழியில் மக்களிசை என்ற இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் இசைவாணி ஐயப்ப பக்தர்களை சீண்டும் விதமாக, ‘ஐம் சாரி ஐயப்பா, உள்ளே வந்தா தப்பாப்பா’ என்ற பாடலை பாடியிருப்பார்.

இதுதான் சர்ச்சைக்குள்ளானது. அதாவது, 10 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே ஐப்பன் கோவிலுக்கு நுழைய வேண்டும் என்ற விதி உள்ளது. அதனை கேள்வி கேட்கும் விதமாகவே இசைவாணி இந்தப் பாடலை பாடியிருக்கிறார். இதற்கு முன்பு, இது குறித்தான விவாதம் எழுந்திருக்கும் நிலையில் இசைவாணி இப்படியான வரிகளோடு பாடல் பாடியிருப்பது ஐயப்பனையும் தங்கள் உணர்வுகளையும் புண்படுத்தியிருப்பதாக ஐயப்ப பக்தர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். மேலும், இசைவாணி மற்றும் இயக்குநர் ரஞ்சித் மீதும் கோவை மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE