‘முஃபாஸா’வுக்கு குரல் கொடுத்தது பெருமை: அர்ஜுன் தாஸ்

By KU BUREAU

கடந்த 2019-ல் உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் படம், ‘தி லயன் கிங்’. இதன் அடுத்த பாகமாக ‘முஃபாஸா: தி லயன் கிங்’ என்ற படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் கதை, ஆதரவற்ற குட்டியான முஃபாசாவையும், அரச குடும்பத்தின் வாரிசான டாக்கா எனப்படும் ஓர் அன்பான சிங்கத்தையும் அறிமுகப்படுத்துகிறது. இந்தப் படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். டிச. 20-ல் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

இதன் தமிழ்ப் பதிப்பில், முஃபாஸா கதாபாத்திரத்துக்கு அர்ஜுன் தாஸ் டப்பிங் பேசியுள்ளார். அசோக் செல்வன் டாக்கா என்ற கதாபாத்திரத்துக்குப் பின்னணி குரல் கொடுத்துள்ளார். ரோபோ சங்கர், சிங்கம் புலி, நாசர், விடிவி கணேஷ் ஆகியோர் முறையே, பும்பா, டிமோனா, கிரோஸ், ரஃபிக்கி ஆகிய கதாபாத்திரங் களுக்குக் குரல் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து அர்ஜுன் தாஸ் கூறும்போது, "முஃபாஸா: தி லயன் கிங் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது கனவு போன்றது. அது நனவாகி உள்ளது. நம் குழந்தைப் பருவ நினைவுகள் அனைத்திலும் தனி இடத்தைப் பிடித்தி ருக்கும் ஒரு சின்னப் பாத்திரத்துக்குக் குரல் கொடுப்பது பெருமையாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE