இசையமைப்பாளர் ரஹ்மான் பற்றிய வதந்தி; பதிலடி கொடுத்த மகன் அமீன்!

By KU BUREAU

இசையமைப்பாளர் ரஹ்மான் குறித்து பரவி வரும் வதந்திக்கு அவரது மகன் அமீன் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ராபானு 29 வருட திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தார். இது ரஹ்மான் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. ரஹ்மான் குறித்து தவறான சில விஷயங்களும் இணையத்தில் பரவின.

இதற்கு அவரது மகன் அமீன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். குழந்தை சிரிக்கும் புகைப்படம் மற்றும் ரஹ்மான் சிரிக்கும் புகைப்படத்தை ஒன்றாக வைத்து ‘இருவருக்கும் வயதைத் தவிர வேறு என்ன வித்தியாசம் இருக்கிறது?’ எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், ’என்னுடைய அப்பா லெஜெண்ட்! அவருடைய இசை பங்களிப்புக்காக மட்டுமல்ல, அவருடைய மரியாதை இத்தனை வருடம் பெற்று வைத்த அன்பு இதற்கெல்லாம் தான். ஆனால், அவரைப் பற்றி ஆதராம் இல்லாத பொய் செய்திகள் பரவி வருவதை பார்க்கும் போது மனவருத்தமாக இருக்கிறது.

அடுத்தவர்களுடைய வாழ்வில் மரியாதையும் உண்மையும் நாம் வைத்திருக்க வேண்டும். தவறான விஷயங்களைப் பரப்புவதை நிறுத்துங்கள். அவரது கண்ணியத்தையும், நம் அனைவரிடமும் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும் போற்றிப் பாதுகாப்போம்’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE