சென்னை: ‘புஷ்பா2’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளைத் தொடங்கி இருப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்திருக்கிறார்.
சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘புஷ்பா2’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இரண்டாம் பாகத்திற்கான டப்பிங் பணியை தொடங்கி இருப்பதாக நடிகை ராஷ்மிகா தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘புஷ்பா2’ படம் முடிந்துவிட்டது. இதில் முதல் பாகத்தின் டப்பிங் முடித்துவிட்டேன். இரண்டாம் பாகத்திற்கான டப்பிங் தொடங்கியிருக்கிறேன். முதல் பாதி அருமையாக வந்திருக்கிறது. இரண்டாம் பாதி அதைவிட சூப்பர். சொல்வதற்கு வார்த்தைகள் என்னிடம் இல்லை. திரையரங்குகளில் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். ‘புஷ்பா2’ டீமை விட்டு பிரிகிறேன் என்பதில் அதிக வருத்தம் எனக்கு’ எனக் கூறியிருக்கிறார்.