’கார்த்திகை தீபம்’ சீரியலில் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திக், ஹர்திகா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல் சமீபத்தில் முடிவடைந்தது. முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த ஹர்திகா இரண்டாம் பாகத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு சமீபத்திய பேட்டியில் அதிருப்தியும் தெரிவித்தார் ஹர்திகா. புது சீரியல் கிராமத்து கதைக்களத்தில் நடக்க இருக்கிறது.
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நடிகை கார்த்திக்கின் அத்தையாக சாமுண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கார்த்திக்கு ஜோடியாக ஜீ கேரளம் சேனல் மூலம் பிரலமான வைஷ்ணவி நடிக்க உள்ளார். இவர்களுடன் நடிகர்கள் விஜயகுமார், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த வாரம் முதல் சீரியலின் இரண்டாம் பாகம் தொடங்கி இருக்கிறது.