பிக்பாஸ்8: அர்ச்சனாவுடனான காதலை உறுதி செய்த அருண்!

By KU BUREAU

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நடிகர் அருண், அர்ச்சனா மீதான தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார்.

’பாரதி கண்ணம்மா’ புகழ் நடிகர் அருண் மற்றும் ‘ராஜா ராணி’ புகழ் அர்ச்சனா இருவரும் காதலித்து வருவதாகத் தகவல் பரவியது. இதனை இரு தரப்பினரும் உறுதி செய்யாத நிலையில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் மறைமுகமாக அர்ச்சனா மீதான காதலை சொல்லிய அருண் விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

நேற்று அர்ச்சனாவின் பிறந்தநாள். இதற்காக அருண் தனது வாழ்த்துகளை பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராவில் பதிவு செய்திருக்கிறார். அதில், ”ஹாய், ஹார்லி! நீ நல்லா இருக்கேன்னு நம்பறேன். இந்த வாரம் கேப்டனாக மாறியிருக்கிறேன். சீக்கிரம் கப்புடன் உன்னை சந்திக்கறேன். பிறந்தநாள் வாழ்த்துகள். லவ் யூ!” எனப் பேசியிருக்கிறார். அருணின் இந்த வீடியோவை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்திருக்கும் அர்ச்சனாவும் ‘என் பிறந்தநாள் இப்போது தான் பூர்த்தியடைந்திருக்கிறது. இதைப் பார்ப்பதற்காக நள்ளிரவு ஒரு மணி வரை காத்திருந்தேன். இது அற்புதமான உணர்வு’ எனப் பேசியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE