”அமரன்” படத்துக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தையும், தேச பக்தியையும் எடுத்துக்காட்டும் வகையில் ‘அமரன்’திரைப்படம் வெளியாகியுள்ளது. படக்குழுவுக்கு பாராட்டுகள். அதே நேரத்தில், எஸ்டிபிஐ கட்சியினர் அமரன் படத்தை திரையிடும் திரையரங்கத்தை முற்றுகையிட்டுள்ளனர். மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திரு முருகன் காந்தி, காஷ்மீர் தீவிரவாதிகளை தியாகிகள் என்று திரித்துப் பேசியுள்ளார்.

இவ்வாறான செயல்கள் மக்களை திசை திருப்பி, பிரிவினைவாதத்தை ஊட்டும் திட்டமிட்ட சதி செயல்கள் என்பதை தமிழக காவல் துறை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், பேரணி உள்ளிட்டவற்றுக்கு அனுமதி மறுத்து, போராடுபவர்களை கைது செய்யும் தமிழக அரசு, எஸ்டிபிஐ அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும், திரையரங்கை முற்றுகையிடவும் அனுமதி அளித்துவிட்டு, பின்னர் கைது நாடகம் நடத்தியுள்ளது வெட்கக்கேடானது.

காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத்தை எடுத்துக்காட்டும் திரைப் படங்களை முடக்கவும், தமிழக திரைத் துறையில் பிரிவினைவாத ஆதிக்கத்தை நிலை நாட்டவும் தமிழகத்தில் மட்டும் இதுபோன்ற செயல்களில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் ஈடுபடுகின்றன.. இதுபோன்ற சமூக விரோத, தேச விரோதச் செயல்களுக்கு ஆதரவு தருவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE