’சிட்டாடெல்: ஹனி பனி’ வெப் சீரிஸ் விமர்சனம்

By KU BUREAU

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ’சிட்டாடெல்: ஹனி பனி’ இணைய தொடர் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட்டில் ஹிட்டடித்த இந்த இணையத்தொடரின் இந்திய ஸ்பின் ஆஃபில் நடிகர்கள் வருண் தவான், சமந்தா உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். ’தி ஃபேமிலி மேன்’ புகழ் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் ரூஸோ பிரதர்ஸ் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் இந்த வெப்சீரிஸ் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

காலையில் சினிமாவில் ஸ்டண்ட் மேனாக இருக்கும் பனி (வருண் தவான்), இரவில் உளவாளியாக இருக்கிரார். இன்னொரு பக்கம் சினிமாவில் கதாநாயகி ஆசையில் இருக்கும் ஹனிக்கு (சமந்தா) சிறுசிறு கதாபாத்திரங்களே கிடைக்கிறது. இதனால், விரக்தியில் இருக்கிறார். பொருளாதாரா ரீதியாகவும் சிரமத்தில் இருக்கும் சமந்தாவுக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுக்கிறார் வருண். பணத்திற்காக சமந்தா இதை வெற்றிகரமாக செய்து முடித்தாலும் இறுதியில் சிக்கலில் மாட்டுகிறார். ஒருக்கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி வருணைப் போலவே உளவாளியாக சமந்தா மாறும் சூழல் வருகிறது. இருவரும் இணைந்து பல அசைன்மெண்ட்ஸ் செய்கிறார்கள். ஆனால், ஒரு பிரச்சினை காரணமாக இருவரும் பிரிகிறார்கள். எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் சந்திக்கும்போது சமந்தா நாடியா என்ற பெண் குழந்தைக்கு அம்மாவாக இருக்கிறார். ஹனி மற்றும் நாடியாவை ஒரு கும்பல் துரத்துகிறது. அந்த கும்பலிடம் இருந்து சமந்தா நாடியாவை காப்பாற்ற போராட இவர்கள் இருவரையும் வருண் தவான் காப்பாற்ற வருகிறார். இறுதியில் என்ன ஆனது? சமந்தாவை துரத்தும் கும்பல் யார்? ஹனி, பனி மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் ‘சிட்டாடெல்: ஹனி பனி’ வெப்சீரிஸின் கதை.

வருண் & சமந்தா ஒன்றாக இருந்த 1992 மற்றும் அவர்கள் பிரிந்த பிறகு 2000 ஆம் ஆண்டு என இரண்டு காலக்கட்டத்தில் இந்த கதை நடக்கிறது. சமந்தா, வருண் தவான் மற்றும் நாடியா ஆகிய மூன்று கதாபாத்திரங்களே பிரதானம். அவர்களை சுற்றியே இந்த பரபரக்கும் ஆக்‌ஷன் கதை நடக்கிறது. ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என ஹனியாக அசத்தியிருக்கிறார் சமந்தா. குறிப்பாக, மெதுவாக தொடங்கும் முதல் இரண்டு எபிசோட்களை கடந்து வரும் மூன்றாவது எபிசோட் தொடக்கத்தில் வரும் சமந்தாவின் ஆக்‌ஷன் சீக்வன்ஸ் அவரது ரசிகர்களுக்கான ட்ரீட். ஆக்‌ஷன் ஹீரோவாக வருணும் சிறப்பாக நடித்திருக்கிறார். நாடியாவாக வரும் குழந்தை நட்சத்திரத்தின் தேர்வும் அவரது கதாபாத்திர வடிவமைப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.

இரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் மற்றும் சில 18+ காட்சிகளுக்காக இது குழந்தைகளுக்கான வெப்சீரிஸ் கிடையாது. மொத்தம் ஆறு எபிசோடுகள். இதன் 50 நிமிடங்கள் என்ற நீளம் பல இடங்களில் அயர்ச்சியை தருகிறது. சிட்டாடெல் கதை தெரிந்த ஒன்று என்பதால் பல இடங்களில் இதுதான் நடக்கப் போகிறது என்பதும் கணிக்க முடிகிறது. சிட்டாடெல் சீரிஸூக்கே உரிய சிறப்பாக, இந்தியன் ஸ்பின் ஆஃபிலும் கதை நடக்கும் இடம், தொழில்நுட்பக்குழு எல்லாமே சிறப்பாக வந்திருக்கிறது. சிட்டாடெல் யுனிவர்ஸில் நாம் பார்த்து பழகின அதே ஆக்‌ஷன் ப்ளஸ் செண்டிமெண்ட்டை இந்திய ரசிகர்களுக்கு ஏற்றபடி கொடுத்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE