ரிஷிகேஷில் திருமணம் முடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்!

By KU BUREAU

நடிகை ரம்யா பாண்டியனுக்கு ரிஷிகேஷில் இன்று திருமணம் முடிந்துள்ளது.

’ஜோக்கர்’, ‘ஆண்தேவதை’ உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். சினிமாவில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் ‘குக் வித் கோமாளி’, ‘பிக்பாஸ்’ போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். யோகா செய்வதில் ஆர்வம் கொண்டவரான ரம்யா பாண்டியன் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் ரிஷிகேஷில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் யோகா பயிற்சியும் எடுத்து வந்தார்.

அங்கு யோகா பயிற்சியாளராக இருந்த லோவல் தவான் என்பவருடன் காதல் வயப்பட்டிருக்கிறார் ரம்யா. இவர்களது திருமணம் இன்று காலை ரிஷிகேஷ், கங்கை நதிக்கரையோரத்தில் உள்ள கோயிலில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்திருக்கிறது. திருமண வரவேற்பு நவம்பர் 15 அன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் இந்தத் தம்பதிக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE