வனவிலங்கு பாதுகாப்புக்கு நிதியுதவி: காசோலை வழங்கிய நடிகை நிக்கி கல்ராணி!

By KU BUREAU

வனவிலங்கு பாதுகாப்பிற்காக வண்டலூர் மிருகக் காட்சி சாலைக்கு சமூக சேவகர் அப்சரா ரெட்டி தலைமையிலான குட் டீட்ஸ் கிளப் சார்பில் ரூ. 3 லட்சம் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை நிக்கி கல்ராணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அந்த காசோலையை அவரிடம் வழங்கினார்.

தமிழ்நாட்டின் வனவிலங்குகளைப் பாதுகாப்பதிலும், அதற்கான சமூக ஆதரவின் அவசரத் தேவை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. வண்டலூர் மிருகக் காட்சி சாலைக்கு வழங்கப்பட்ட இந்த நன்கொடை வாழ்விட மேம்பாடு, விலங்கு பராமரிப்பு மற்றும் எதிர்கால சந்ததியினரிடையே வனவிலங்குகள் குறித்த புரிதலை வளர்க்க, வடிவமைக்கப்பட்ட கல்வித் திட்டங்களுக்கு நேரடியாக நிதியளிக்கும் என அந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகை நிக்கி கல்ராணி பேசியதாவது, “உயிரினங்களும் அவற்றின் வாழ்விடங்களும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதின் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு பெருமை. எதிர்கால சந்ததியினருக்கு உதவும் வகையில் இந்த நிதியுதவி பயன்படும் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE