நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் இன்று ஜப்பானில் நடந்து முடிந்திருக்கிறது.
நடிகரும் அரசியல்வாதியுமான நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் வீடியோ கால் மூலம் நடந்தது. திருமணம் இன்று காலை 8 மணியளவில் ஜப்பானில் உறவினர்கள், நண்பர்கள் சூழ நடந்திருக்கிறது.
தமிழ் திரையுலகில் இருந்து குஷ்பு, ராதிகா, மீனா, சரத்குமார், பாண்டியராஜன், கலா மாஸ்டர் எனப் பல பிரபலங்களும் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். ஆட்டம், பாட்டம் என களைக்கட்டிய தனுஷ்- அக்ஷயா ஜோடியின் திருமணத்திற்கு இணையவாசிகள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.