பாலியல் புகாரில் இருந்து நிவின் பாலி விடுவிப்பு

By KU BUREAU

மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார், நிவின் பாலி. கேரள மாநிலம் எர்ணாகுளம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நிவின் பாலி உட்பட 6 பேர் மீது ஊனுக்கல் போலீஸ் ஸ்டேஷனில், சில மாதங்களுக்கு முன் பாலியல் புகார் கொடுத்திருந்தார்.

படவாய்ப்பு தருவதாகக் கூறி துபாயில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகப் புகாரில் கூறியிருந்தார். நிவின் பாலி இதை உடனடியாக மறுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் 2023-ம் ஆண்டு டிச.25-ம் தேதி, நிவின் பாலி கேரளாவில் இருந்ததை போலீஸார் உறுதி செய்தனர். இதனால் இந்த வழக்கை விசாரித்து வரும் கொத்தமங்கலம் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிவின் பாலிக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அறிக்கை சமர்ப்பித்தனர். இதனால் இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மற்றவர்கள் மீது விசாரணை நடைபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE