‘அமரன்’ படத்தில் என் அப்பாவாக இருக்க முயற்சித்தேன்: நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கம்

By KU BUREAU

சென்னை: ‘அமரன்’ பட வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாகப் பேசியுள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான படம் ‘அமரன்’. இதன் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாகப் பேசினார். “மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை படமாக எடுக்க ஒப்புக் கொண்ட குடும்பத்தாருக்கு நன்றி. இந்தப் படத்தில் எந்த இடத்திலும் சிவகார்த்திகேயன் தெரியவில்லை என்று பலரும் சொன்னார்கள். அனைவருக்கும் மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றி தெரியும். ஆனால், என் தந்தை ஜெயிலர் போஸ் பற்றி பலருக்கும் தெரியாது.

இந்தப் படத்தில் நான் நடித்துவிட வேண்டும் என்று தோன்ற காரணம் என் தந்தைதான். அவர் எப்போதும் மிடுக்கான சீருடையில் இருப்பார். கடந்த 21 ஆண்டுகளாக அவர் நினைவுகளில்தான் வாழ்ந்து வருகிறேன். என் 17 வயதில் அப்பாவின் உடைந்த எலும்புகளைப் பார்த்தபோது என் வாழ்க்கையும் உடைந்தது. அப்போது உடைந்தவனை ஒட்ட வைத்து ஆளாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. இந்தப் படத்தில் என் அப்பாவைப் போலதான் இருக்க முயன்றேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE