பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் தமிழில், தனுஷின் ஜகமே தந்திரம், வைபவ் நடித்த பபூன் படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். ஜோஜு ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் மலையாள படம், ‘பனி’. இந்தப் படம் கடந்த மாதம் 24-ம் தேதி வெளியானது.
யூடியூப் விமர்சகர் ஆதர்ஷ் என்பவர், படத்தில் இடம்பெற்ற பாலியல் வன்கொடுமை காட்சியை விமர்சித்திருந்தார். ‘அந்தக் காட்சி பார்வையாளர்களின் அனுதாபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், பெண்களைக் காட்சிப்பொருளாகச் சித்தரிக்கும் வகையில் மோசமாக எடுக்கப்பட்டுள்ளது’ என்று அவர் கூறியிருந்தார். அவருக்கு போன் செய்த ஜோஜுஜார்ஜ், அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த போன் உரையாடல் ஆடியோவை வெளியிட்டுள்ள விமர்சகர் ஆதர்ஷ், இதுபோன்று மற்றவர்களை அவர் மிரட்டக் கூடாது என்பதால் வெளியிடுவதாகக் கூறியுள்ளார். இது சர்ச்சையானது.
இதற்குப் பதிலளித்துள்ள ஜோஜு ஜார்ஜ், ‘அவரிடம் பேசியது உண்மைதான். இந்தப்படத்துக்காக, 2 ஆண்டுகள் உழைத்துள்ளேன். தயாரிப்பாளராக அதிக முதலீடு செய்துள்ளேன். விமர்சனம் என்கிற பெயரில் அவர், சமூக வலைதளங்களில் பனி படத்தைப் பார்க்க வேண்டாம் என கூறி வந்தார். திட்டமிட்டே ஒருபடத்தை காலி செய்வது எந்த விதத்தில் நியாயம்? இதை சட்ட ரீதியாகச் சந்திப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
» சித்ரவதை செய்து சிறுமியை கொன்றது அம்பலம்: வீட்டு உரிமையாளர் உட்பட 6 பேர் சிறையில் அடைப்பு
» மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் பலப்பரீட்சை