தவெக மாநாட்டிற்காக விஜய்க்கு ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி நடைபெற்றது. அந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு எதிர்ப்புகளும், ஆதரவும் ஒரே சேர கிடைத்து வருகின்றன. குறிப்பாக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற பேச்சுக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன.
விஜய்யின் பேச்சுக்கு பல்வேறு திரையுலகினர் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்கள். தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
» கூவத்தூரில் இளைஞர் முகத்தைச் சிதைத்து கொடூரக் கொலை!
» நீலகிரி மாவட்டத்தில் 5.78 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்
அதில், “விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! துறவிகள் மற்றும் சித்தர்களின் பூமியான தமிழ்நாட்டில் தன் அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்கு” என்று தெரிவித்துள்ளார் பவன் கல்யாண்.