தவெக தலைவர் விஜயின் குரலைப் பதிவு செய்தது மறக்க முடியாத அனுபவம் என பாடகர் அறிவு பேசியிருக்கிறார்.
நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தவெக கட்சியின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடந்து முடிந்தது. தனது கட்சியின் கொள்கைப் பற்றி தான் எப்படியான அரசியல் முன்னெடுத்து செல்லப் போகிறேன் என்பது பற்றியும் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் விஜய் பேசியிருந்தார்.
மேடையில் பேசி முடித்ததும் தனது கட்சிக் கொடியின் நிறங்கள், வாகை மலர், பிளிறும் யானைகள், நட்சத்திரங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்தது பற்றி விஜய் குரலில் வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதேபோல, ஐடியாலஜி பாடலும் வெளியிடப்பட்டது.
இந்தப் பாடலை இயற்றியிருப்பது பாடகர் ‘தெருக்குரல்’ அறிவுதான். இது குறித்து அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது, ‘பாடல் எழுதுவதற்கு ’என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?’ எனக் கேட்டேன். ’நீங்கள் மட்டும்தான் அதை செய்ய முடியும்’ என்றார். தவெகவின் கொள்கைப் பாடலை இயற்ற என்னை நம்பி தேர்ந்தெடுத்ததற்கு நன்றி விஜய் சார். உங்கள் குரலைப் பதிவு செய்தது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். உங்கள் அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்’ எனக் கூறியிருக்கிறார்.
» கங்குவா பெரிய தலைவாழை விருந்து: நடிகர் சூர்யா தகவல்
» தவெக மாநாடு: விஜய்க்கு சிவகார்த்திகேயன் முதல் விஜய் சேதுபதி வரை வாழ்த்து