1YearOfLeo: உருக்கமாகப் பகிர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

By KU BUREAU

’லியோ’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருக்கமானப் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த வருடம் ‘லியோ’ படம் வெளியானது. இந்தப் படம் வெளியாகி ஓராண்டு ஆனதையொட்டி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருக்கமானப் பதிவு ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

’நிறைய பாடங்கள், நிறைய நினைவுகள், நிறைய அழகான தருணங்களை இந்தப் படம் கொடுத்திருக்கிறது. என் மனதிற்கு நெருக்கமான படம் ‘லியோ’. லவ் யூ சோ மச் விஜய் அண்ணா. இந்தப் படத்திற்காக வியர்வையையும் ரத்தத்தையும் சிந்தி உழைத்த அனைவருக்காகவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, நேற்று நடந்த ‘அமரன்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க முன்பே யோசித்திருந்ததாகவும் இப்போது அவர் துப்பாக்கியை வாங்கி விட்டதால் விரைவில் அது நடக்கும் எனவும் கூறியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE