'அமரன்’ டூ ‘லக்கி பாஸ்கர்’: தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன?

By KU BUREAU

’அமரன்’ முதல் ‘லக்கி பாஸ்கர்’ வரை இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதைப் பார்க்கலாம்.

இந்த வருட தீபாவளி ரேஸில் பல திரைப்படங்கள் களமிறங்க தயாராகி வருகின்றன. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையான ‘அமரன்’ படம் தீபாவளி ரேஸில் முந்துகிறது. இந்தப் படத்தோடு கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘ப்ளடி பெக்கர்’ மற்றும் நடிகர் ஜெயம் ரவியின் ‘ப்ரதர்’ ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாகிறது.

மேலும், துல்கர் சல்மான் - மீனாட்சி செளத்ரி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர்கள் சத்யராஜ், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜீப்ரா’ திரைப்படம் தெலுங்கில் இந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.

நேரடி கன்னடப் படமாக ‘பகீரா’ மற்றும் இந்தியில் சக்கை போடு போட்ட ‘பூல் பூலையா’ படத்தின் மூன்றாம் பாகமும் இந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE