‘லப்பர் பந்து’ படத்தின் ஓடிடி வெளியீடு தள்ளி வைப்பு!

By KU BUREAU

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ படம் ஓடிடியில் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘லப்பர் பந்து’ படம் கடந்த மாதம் வெளியானது. படத்தின் கதைக்கரு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி கடந்த ஒரு மாதம் ஆன நிலையில் நாளை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் சிம்ப்ளி சவுத் ஆகிய இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.

ஆனால், தியேட்டர்களிலேயே இப்போது வரையும் படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் ஓடிடி வெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கிறார்கள். விரைவில் படம் ஓடிடியில் வெளியாவது எப்போது என்பது அறிவிக்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE