‘ஒன் டைரக்‌ஷன்’ பாடகர் பெய்ன் திடீர் மரணம்: பாப் இசை ரசிகர்கள் அதிர்ச்சி

By KU BUREAU

பிரபல பாப் பாடகர் லியாம் பெய்ன் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகி இருப்பது பாப் இசை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாப் உலகில் பிரபலமான இசை பேண்ட்களில் ஒன்று ‘ஒன் டைரக்‌ஷன்’. கடந்த 2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட இந்த பேண்டில் லியாம் பெய்ன், ஹாரிஸ் ஸ்டைல்ஸ், ஜெய்ன், லூயிஸ், நியால் ஹாரன் ஆகிய ஐந்து பேர் இருக்கிறார்கள். இவர்களது பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த பேண்டில் மிகவும் பிரபலமானவர் லியாம் பெய்ன். சில காரணங்களால் இந்த பேண்டில் இருந்து அவர் விலகினார். ஆனாலும் அந்த பேண்டின் அடையாளமாக அவர் திகழ்ந்தார்.

இவர் கேத் கேசிடி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் கடந்த 30ஆம் தேதி அர்ஜெண்டிவாவுக்கு சுற்றுலா சென்றிருக்கின்றனர். அதன்பிறகு, கேத் கேசிடி சொந்த வேலைகள் காரணமாக கிளம்பி விட்டார். அவர் சென்ற பிறகு போனோஸ் ஏர்ஸ் நகரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மூன்றாவது மாடியில் தங்கியிருந்தார் லியாம் பெய்ன். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார். இந்த விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அந்த ஹோட்டலில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது எதிர்பாராமல் நடந்த விபத்தா அல்லது கொலையா என வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE