நான் வாழும் தியாகி: நடிகர் ஜெயசூர்யா விளக்கம்

By KU BUREAU

மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை அடுத்து சில நடிகர்கள் மீது, நடிகைகள் சிலர் பாலியல் புகார் கூறினர்.

ஆலுவாவை சேர்ந்த நடிகை ஒருவர் நடிகர் ஜெயசூர்யா மீது புகார் கூறியிருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு மலையாள படபடப்பிடிப்பின்போது ஜெயசூர்யா கட்டிப்பிடித்துப் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறியிருந்தார். இது தொடர்பான வழக்கில் திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரான ஜெயசூர்யாவிடம் போலீஸார் சுமார் ஒன்றரை மணிநேரம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் ஜெயசூர்யா, "என் மீதானகுற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். அது முற்றிலும் புனையப்பட்டது. எனக்கு முன்ஜாமீன் கூட தேவையில்லை. என் மீதான குற்றச் சாட்டுகள் பொய் என்று நிரூபிக்கும் வரைதொடர்ந்து சட்ட ரீதியாகப் போராடுவேன். நான் வாழும்தியாகி என்பதை நம்புகிறேன். யார் மீது வேண்டுமானாலும் பொய் வழக்குப் போடலாம் என்பது ஆபத்தானது. இப்படியான பொய் வழக்குகள் பலரது குடும்பத்தைச் சீர்குலைத்து விடும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE