'மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகரின் லைசென்ஸ் ரத்து!

By KU BUREAU

’மஞ்சுமெல் பாய்ஸ்’ படநடிகர் ஸ்ரீநாத் பாஸியின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் பெரும் வரவேற்பு பெற்ற படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீநாத் பாஸி. கடந்த சில நாட்களுக்கு முன் எர்ணாகுளம் மட்டாஞ்சேரி பகுதியில் காரில் சென்ற ஸ்ரீநாத் பாஸி பைக்கில் சென்ற முகமது பஹீம் என்பவரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக புகார் எழுந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

பின்பு ஜாமீனில் வெளிவந்த அவரின் ஓட்டுநர் உரிமத்தை எர்ணாகுளம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தற்காலிகமாக ரத்து செய்துள்ளார். இதனால், ஒரு மாதத்திற்கு வாகனங்களை இயக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, சமீபத்தில் கேரளாவில் நடந்த போதை விருந்து ஒன்றில் ஸ்ரீநாத் பாஸி கலந்து கொண்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE