கணவருடன் புதுவீட்டில் குடியேறினார் நடிகை ஹன்சிகா மோத்வானி!

By KU BUREAU

நடிகை ஹன்சிகா மோத்வானி புதுவீட்டில் தனது கணவருடன் குடியேறி இருக்கிறார்.

’மாப்பிள்ளை’, ‘பிரியாணி’, ‘சிங்கம்2’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. தமிழில் ஒரு காலத்தில் டிரெண்டிங் நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவுக்கு பின்பு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. உடல் எடை குறைத்து வாய்ப்புகள் எதிர்நோக்கியும் அது பெரிதாக கைக்கொடுக்கவில்லை. கடந்த 2022ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரான சோஹைல் கத்தூரியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.

திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் குட் நியூஸ் என்ற விஷயத்தை ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார் ஹன்சிகா. தனது கணவருடன் புதிதாக வாங்கியிருக்கும் வீட்டிற்கு கிரஹப்பிரவேசம் செய்து குடிபுகுந்துள்ளார் ஹன்சிகா. இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து தனது சந்தோஷத்தைப் பகிர்ந்திருப்பவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் சொல்லி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE