அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உட்பட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் லியோ ஜான் பால். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘ககன மார்கன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
மர்டர் மிஸ்டரி க்ரைம் திரில்லர் படமான இதில் விஜய் ஆண்டனி, காவல் அதிகாரியாக, வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர், தீப்ஷிகா உட்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “விஜய் ஆண்டனி, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் ‘காற்றின் வழி பயணிப்பவன்’ என்று பொருள். வழக்கமான க்ரைம் திரில்லர் படமாக இல்லாமல் புதிய வகையான கதாபாத்திரங்கள், தமிழ் பாரம்பரிய மரபு சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய புலனாய்வு திரைக்கதையாக இருக்கும்” என்றார்.
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: பவுன் ரூ.57,120-க்கு விற்பனை
» தீபாவளிக்கு ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தடையின்றி விநியோகம்: அமைச்சர் உறுதி