‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா: ஸ்பெஷல் கெஸ்ட் யார் தெரியுமா?

By KU BUREAU

சென்னை: நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. நவம்பர் மாதம் 14 ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளைப் படக்குழு தொடங்கியுள்ளது. இந்த மாத இறுதியில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இதன் அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது. ஏனெனில், ‘கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி முதலில் வெளியாவதாக இருந்தது.

ஆனால், ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்திற்காக ‘கங்குவா’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இதனை ‘மெய்யழகன்’ பட மேடையிலேயே சூர்யா தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். இதற்காகவே, ரஜினிகாந்த் ‘கங்குவா’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவார் என்கிறார்கள். ’கங்குவா’ படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஸ்பேனிஷ், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதனால், சூர்யாவின் குரல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கொண்டு வர இருக்கிறார்களாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE