'மஞ்சள் வீரன்’ படத்தின் கதாநாயகனானார் கூல் சுரேஷ்!

By KU BUREAU

’மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎஃப் வாசனுக்குப் பதிலாக கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் ‘மஞ்சள் வீரன்’. இதனை செல் அம் இயக்குகிறார். கதாநாயகன் தவிர்த்து மற்ற நடிகர்களுடைய போர்ஷன் படமாக்கப்பட்ட நிலையில், படத்தின் கதாநாயகனான டிடிஎஃப் வாசன் உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனவும் அவருடைய கவனம் வேறு பக்கம் இருக்கிறதாகவும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினார் இயக்குநர் செல் அம்.

ஆனால், இதுபற்றி இயக்குநர் தன்னிடம் முறையாக தெரிவிக்கவில்லை என்றும் ஃபோட்டோஷூட், பூஜைக்கெல்லாம் தான் செலவு செய்ததாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்றும் டிடிஎஃப் வாசன் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேச பலமுறை இயக்குநரை அழைத்தும் அவர் முறையாக பதிலளிக்கவில்லை என்றும் சொன்னார். இப்போது டிடிஎஃப் வாசனுக்குப் பதிலாக நடிகர் கூல் சுரேஷ் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார் என்ற தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு உலா வந்தது. அதனை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு. படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE