'சர்தார்2’ படத்தில் சண்டைக்காட்சிகள்: மாளவிகா மோகனன் பகிர்ந்த புகைப்படம்!

By KU BUREAU

’சர்தார்2’ படத்தில் கடினமான சண்டைக் காட்சிகளைப் படமாக்கியதாக நடிகை மாளவிகா மோகனன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ‘சர்தார்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து வருவதாக உடல் முழுவதும் ரோப் கட்டியிருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து நீண்ட பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார் மாளவிகா.

அதில், ‘’சர்தார்2’ படத்தில் சில சவாலான காட்சிகளை படமாக்கினோம். அதற்காக நான் எப்படித் தயாரானோன் என்பதை இந்தப் புகைப்படங்கள் மூலம் உங்களுக்குக் காட்டுகிறேன். இப்படித்தான் உயரத்தில் இருந்து குதிக்கும்போதும் பறக்கும்போது பாதுகாப்பு சாதனங்களை அணிந்து கொள்வோம். ஆனால், இதை அணிந்து கொண்டு முதல் முறையாக ‘தங்கலான்’ படத்தில் ஸ்டண்ட் செய்தபோது அசெளகரியமாக உணர்ந்தேன். ஆனால், இப்போது நூறு அடி உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும் என்ற சவாலான விஷயத்தைக் கூட இதன் உதவியோடு செய்து முடித்தேன். இந்த சண்டைக்காட்சி சரியாக வந்ததில் எனக்கு மகிழ்ச்சி’ எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE