நடிகை ஸ்ருதிகா இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
உலகப்புகழ் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவிலும் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தி, மராத்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய இந்திய மொழிகளில் ஒளிபரப்பாகிறது. நேற்று தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தொடங்கியது போல, இந்தி பிக்பாஸின் 18 ஆவது சீசன் தொடங்கியது. இந்தி பிக்பாஸை நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில்தான் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஸ்ருதிகா கலந்து கொண்டிருக்கிறார். நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ‘ஸ்ரீ’ என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர், சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தவர், ‘குக் வித் கோமாளி3’ மூலம் மீடியாவில் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.
இதில் டைட்டில் வின்னராகவும் வந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் ஸ்ருதிகாவுக்கு நிறைய ரசிகர்களும் கிடைத்தார்கள். இந்த பிரபல்யத்தைப் பயன்படுத்தி இந்தி பிக்பாஸ்18ல் போட்டியாளராகக் கலந்து கொண்டிருக்கிறார் ஸ்ருதிகா. இதில் கலந்து கொள்ளும் முதல் தமிழ் பெண் போட்டியாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இவர் சல்மான்கானிடம் பேசும் விதம், போட்டியாளர்களுடன் கலந்துரையாடுவதைப் பார்த்த ரசிகர்கள் அவர் போலியாக இருக்கிறார், இந்தி பிக்பாஸூக்கு தகுதி இல்லாதவர் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதற்கு முன்பு தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதிகாவின் பெயர் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.