சாதியும் மதமும் நீங்கள் சந்திக்காத மனிதர்களைக் கூட வெறுக்க வைக்கும் - பயணம் குறித்து அஜித் வைரல் வீடியோ!

By KU BUREAU

சென்னை: சாதியும் மதமும் இதுவரை நீங்கள் சந்திக்காத மனிதர்களை பயணம் கொடுக்கும் என நடிகர் அஜித் பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிப்பதைத் தாண்டி நடிகர் அஜித் பயணம் செய்வதில் அலாதி பிரியம் கொண்டவர். ‘ஏகே மோட்டோ ரைட்ஸ்’ என்ற பெயரில் பயணம் செய்பவர்களையும் ஒன்றிணைத்து வருகிறார். இந்த நிலையில், பயணத்தில் நடிகர் அஜித் பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “இந்த உலகம் பல கலாச்சாரங்களால் மக்களால் நிறைந்திருக்கிறது. அதை எல்லாம் தெரிந்து கொள்ள நாம் அதிகம் பயணப்பட வேண்டும். அப்படி பயணப்படும்போது நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம்.

அது ஒரு மருத்துவம் போலதான். சாதியும் மதமும் இதுவரை நீங்கள் சந்திக்காத மனிதர்களைக் கூட வெறுக்க வைக்கும். முன் முடிவுகளைத் தரும். ஆனால், பயணம் அதை முற்றிலும் மாற்றும். நிறைய மனிதர்களை சந்திக்க வைக்கும். புது அனுபவம் கொடுக்கும்” எனப் பேசியிருக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இதை வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ அஜித் லடாக், தாய்லாந்து சுற்றுப் பயணம் செல்லும்போது எடுக்கப்பட்டது எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE