நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட 'ராக்கெட் டிரைவர்' டிரைலர்!

By KU BUREAU

சென்னை: நடிகர்கள் சுனைனா மற்றும் விஸ்வத் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘ராக்கெட் டிரைவர்’ படத்தின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ளார்.

நடிகை சுனைனா, நடிகர்கள் விஸ்வத், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன் மற்றும் பலர் நடித்திருக்கும் 'ராக்கெட் டிரைவர்' திரைப்படம் சாதாரண ஆட்டோ ஓட்டுநரைப் பற்றிய கதையை கொண்டுள்ளது. முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாமை தனது ரோல் மாடலாக கொண்டிருக்கும் ஆட்டோ ஓட்டுநர், தன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இளம் வயது அப்துல் கலாமை சந்திக்கிறார். இளம் வயது அப்துல் கலாமை சந்திக்கும் போது ஆட்டோ ஓட்டுநர் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம் மற்றும் அடுத்தடுத்த சம்பவங்கள் கலகலப்பாகவும், பொழுதுபோக்காகவும் சொல்லும் கதையே இப்படமாகும்.

'ராக்கெட் டிரைவர்' படத்திற்கு கௌசிக் கிரிஷ் இசையமைக்க, ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் கதையை அக்ஷய் பூல்லா, பிரசாந்த் எஸ் மற்றும் ஸ்ரீராம் ஆனந்தசங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தப் படத்தை ஸ்ரீராம் ஆனந்தசங்கர் இயக்குகிறார். பட்த்தின் டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ளதற்கு படக்குழு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE