நடிகர் விஜயின் விரலில் 'GOAT' மோதிரம்; யாருடைய பரிசு தெரியுமா?

By KU BUREAU

சென்னை: நடிகர் விஜய் தனது விரலில் ‘GOAT' என்ற எழுத்துகள் பொறித்திருக்கும் புதிய மோதிரம் ஒன்றை அணிந்திருக்கிறார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ‘GOAT' திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. மேலும் ஓடிடியிலும் இந்தப் படம் நேற்று வெளியானது. இயக்குநர் வெர்ஷனுக்கான விஎஃப்எக்ஸ் மற்றும் இறுதிப் பணிகள் நிறைவடையாததால் தியேட்டரில் வெளியான வெர்ஷனே ஓடிடியிலும் வெளியானது. உலகம முழுவதும் இந்தப் படம் கிட்டத்தட்ட ரூ. 500 கோடிகளை வசூலித்திருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இன்று விஜயின் கடைசிப் படத்திற்கான பூஜை நடைபெற்ற வேளையில் இன்னொரு பக்கம் விஜயின் தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்த உற்சாகத்தில் ரசிகர்கள் இருந்தபோதே இன்னொரு சர்ப்ரைஸாக தனது விரலில் ‘GOAT' என்ற எழுத்துகள் பொறித்த மோதிரம் ஒன்றை அணிந்து புகைப்படம் பகிர்ந்திருக்கிறார் விஜய். ‘GOAT' படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றிக்காக படத்தின் தயாரிப்பாளர் டி. சிவா கொடுத்திருப்பதாக இயக்குநர் வெங்கட்பிரபு தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE