இயக்குநராக அறிமுகமாகும் ஜோதிகா மகள்: அறிமுக படத்திலேயே 2 சர்வதேச விருதுகளை வென்று பெருமிதம்!

By KU BUREAU

இது லிஸ்ட்லேயே இல்லையே என்று திரையுலகில் ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்துடன் தங்களது வாழ்த்துக்களை சூர்யாவிடமும், ஜோதிகாவிடமும் கூறி வருகின்றனர். இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் நடிகர்கள் சூர்யா- ஜோதிகா மகள் தியா, இயக்கியிருக்கும் ஆவணப்படத்திற்கு சர்வதேச அளவில் இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘லீடிங் லைட் : தி அன்டோல்ட் ஸ்டோரிஸ் ஆஃப் வுமன் பிஹைண்ட் தி சீன்ஸ்' என இந்த ஆவணப்படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம், திரிலோகா இன்டர்நேஷனல் ஃபிலிம்பேர் விருதுகளில் திரையிடப்பட்டு சிறந்த ஆவணப்படத்திற்கான விருது மற்றும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற இரண்டு விருதுகளையும் வென்றுள்ளது.

மகள் தியா விருது மற்றும் சான்றிதழுடன் இருக்கும் புகைப்படத்தை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ''பொழுதுபோக்கு துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அர்த்தமுள்ள ஆவணப்படத்தை உருவாக்கியதற்காக தியாவை நினைத்து பெருமைப்படுகின்றேன். பெண்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்னையை வெளிக்கொண்டு வந்ததற்காக நன்றி. இதுபோல ஆக்கப்பூர்வமான விஷயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார். தியாவின் இந்த புதிய அவதாரத்திற்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE