‘விஜய் 69’ அப்டேட்: பூஜா ஹெக்டே, மமிதா பைஜு

By KU BUREAU

‘தி கோட்’ படத்துக்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார், விஜய். இந்தப் படத்தை பெங்களூரைச் சேர்ந்த கேவிஎன் புரொடக் ஷன்ஸ் சார்பில் வெங்கட் நாராயணா தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு நடிகர் விஜய், முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இதுதான் அவரது கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இதில் இந்தி நடிகர் பாபி தியோல் இணைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தீப் ரெட்டி வங்காவின் ‘அனிமல்’ படம் மூலம் வில்லனாகக் கவனிக்கப்பட்டுள்ள பாபி தியோல், சூர்யாவின் ‘கங்குவா’படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இப்போது இதில் இணைந்துள்ளார்.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடிக்கின்றனர். ‘பீஸ்ட்’ படத்துக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் பூஜா இதில் இணைந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE