‘மெய்யழகன்’ படத்தின் 18 நிமிட காட்சிகள் நீக்கம்

By KU BUREAU

கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், திவ்யா உட்பட பலர் நடிப்பில் பிரேம்குமார் இயக்கியுள்ள படம், ‘மெய்யழகன்’. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தின் நீளம் அதிகம் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதை அடுத்து, 18 நிமிடங்கள் 42 நொடி காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. “மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை” என்று பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE