’மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கம்!

By KU BUREAU

யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் ‘மஞ்சள் வீரன்’ படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமான நிலையில், தற்போது படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ’மஞ்சள் வீரன்’ படத்தின் இயக்குநர் செல்அம், “ 'மஞ்சள் வீரன்’ படத்தில் கதாநாயகான நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் நீக்கம் செய்யப்படுகிறார். அவருக்குப் பதிலாக புதிய நாயகன் இந்தப் படத்தில் நடிக்கிறார். அவர் யார் என்பது அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வெளியிடுவோம்.

இந்தப் படத்தில் முழுவதுமாக டிடிஎஃப் வாசன் பயணம் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், அவரது கவனம் வேறு பக்கம் உள்ளது என்பதால் மன வருத்தத்தோடு நாங்கள் படத்தில் இருந்து அவரை நீக்குகிறோம். அவர் கைது செய்யப்படுகிறார் என்பது காரணம் இல்லை. என்னுடைய சூழ்நிலைகளுக்கு அவர் ஒத்துவரவில்லை என்பதுதான் விஷயம்.

வில்லன் மற்றும் மற்ற நடிகர்களுக்கான போர்ஷன் படமாக்கப்பட்டுள்ளது. கதாநாயகனுக்கான போர்ஷன் புதிய நாயகன் வந்ததும் படமாக்குவோம். இதுவரை 35% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE