நடிகர் சித்திக்கை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

By KU BUREAU

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை அடுத்து, திரையுலகினர் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை, எர்ணாகுளம் காவல் கண்காணிப்பாளர் பூங்குழலி தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இந்தக் குழுவிடம், நடிகர் சித்திக் மீது நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார்.

அதில், "பட வாய்ப்பு விஷயமாக சித்திக்கிடம் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தேன். 2016-ம் ஆண்டு ஒரு படத்தின் பிரிவியூவுக்கு சென்றபோது திருவனந்தபுரம் மஸ்கட் ஹோட்டலுக்கு அழைத்தார். அங்கு பாலியல் தொல்லை கொடுத்தார்” என்று கூறியிருந்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.
இந்த வழக்கில், கைது செய்யப்படலாம் என்பதால், கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு சித்திக், மனு தக்கல் செய்தார். அதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி சித்திக் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பேலா மாதுர்யா திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, முன் ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், சித்திக்கை கைது செய்ய இரண்டு வாரங்களுக்குத் தடை விதித்தும் உத்தரவிட்டது. மேலும், கேரள அரசு, புகாரளித்த நடிகை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE