ராம் சரணுக்கு மெழுகு சிலை: மேடம் டுசாட்ஸ் கவுரவம்

By KU BUREAU

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரண். ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’, டிசம்பரில் வெளியாகும் என்று தெரிகிறது. இதில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் பிரபலங்களின் மெழுகு சிலை இடம் பெற்றுள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ராம் சரண் சிலையும் இடம்பெற இருக்கிறது.

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டன், துபாய், தாய்லாந்து, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் உள்ளது. இதில் சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் ராம் சரணின் மெழுகு சிலை இடம்பெறுகிறது. அபுதாபியில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் இதை அந்த அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ராம் சரணுடன் அவருடைய செல்ல நாயான ரைமும் சிலையாக இடம்பெறுகிறது. தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் ஆகியோரின் மெழுகு சிலைகள் மேடம் டுசாட்ஸில் ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ளன. தற்போது இவர்களுடன், ராம் சரணும் இணைந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE