உற்சாகத்தில் விஜய்: தவெக கொடியில் யானை சின்னத்திற்கு சிக்கலில்லை!

By KU BUREAU

நடிகர் விஜயின் தவெக கட்சி கொடியில் இடம் பெற்றிருந்த யானை சின்னத்திற்கு வந்த சிக்கல் நீங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 22 அன்று நடிகர் விஜய் தனது தவெக கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சிக் கொடியின் நடுவில் வாகை மலர் இடம் பெற்றிருந்தது. வாகை மலரின் இருபுறமும் பிளிறும் யானைகள் இருக்கும்படி அந்தக் கொடி வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த யானைகள் தங்கள் கட்சியின் சின்னம் எனவும் அதை தவெக உடனடியாக தனது கட்சி கொடியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் பிரச்சினை கிளப்பியது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள பதிலில், “கட்சி கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. ஒரு கட்சியின் கொடிக்கு நாங்கள் ஒப்புதலோ அங்கீகாரமோ கொடுப்பதில்லை. ஆனால், தேர்தல் சமயத்தில் தவெக யானை சின்னத்தை பயன்படுத்த முடியாது” எனக் கூறியிருக்கிறது. இந்த செய்தி தவெக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE