அம்பானி மகன் திருமண கொண்டாட்டம்... குடும்பத்தோடு இத்தாலி கிளம்பிய பாலிவுட் பிரபலங்கள்!

By காமதேனு

அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கி இருக்கிறது. இதற்காக பாலிவுட் பிரபலங்கள் பலரும் குடும்பத்தோடு இத்தாலி கிளம்பி இருக்கிறார்கள்.

அம்பானி வீட்டுத் திருமணக் கொண்டாட்டங்கள் பற்றிய எதிர்பார்ப்புதான் இப்போது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. ஜாம்நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்று நாட்கள் பிரம்மாண்டமாக நடந்த ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களில் பலதுறைகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு வருகிற ஜூன் 12ம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் இரண்டாம் கட்ட நிகழ்வு நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்தக் கொண்டாட்டங்கள் அடுத்த மூன்று நாள்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக, இத்தாலியில் இருந்து உல்லாசக் கப்பல் ஒன்று புறப்பட்டு தெற்கு பிரான்ஸ் சென்றடைகிறது.

இதன் பயண தூரம் மட்டும் 4380 கிமீ என்பது குறிப்பிடத்தக்கது. சல்மான் கான், ஷாருக்கான் உள்ளிட்ட 800 பேர் இந்தக் கப்பலில் செல்கிறார்கள். இவர்களை கவனிக்க கப்பலில் 600 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நாளை தொடங்க இருக்கும் இந்தக் கொண்டாட்டத்திற்காக நடிகர்கள் சல்மான் கான், அலியா பட், ரன்வீர் சிங், கிரிக்கெட்டர் எம்.எஸ். தோனி ஆகியோர் தங்களது குடும்பத்துடன் கிளம்பி இருக்கிறார்கள்.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட்

இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. முதல் ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டத்தைப் போல அல்லாமல், இரண்டாவது ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டத்தின் தகவல்கள் எல்லாமே சீக்ரெட்டாக வைக்க முடிவு செய்திருக்கிறார்கள் அம்பானி குடும்பம். பல பிரபலங்களின் அசத்தும் நடனம், உயர்தர விருந்து உண்டு என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

135 கி.மீ. வேகம்... கரையை கடக்கும் போது சூறையாடிய 'ரெமல்' புயல்: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை!

முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம்... ராஜஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

திருப்பதி அருகே பயங்கர விபத்து... சாலைத் தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி!

சோகம்... சரத்குமார் நடித்த 'மாயி' பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

இடைக்கால ஜாமீனை 7 நாள்கள் நீட்டிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE