திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீர் சாமி தரிசனம்... அடுத்த படத்துக்கான பணிகள் துவக்கமா?

By கே.காமராஜ்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திருத்தணி முருகன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா என இருவருமே, திரைப்படங்கள் இயக்கம், தயாரித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஐஸ்வர்யா கடந்த 2004ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு முதல் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் முறைப்படி விவாகரத்து பெற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருத்தணி முருகன் கோயில்

தனுஷ் நடித்த 3, கெளதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை ஆகிய திரைப்படங்களை ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். தனது தந்தை ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்த லால் சலாம் திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இருப்பினும் படம் பொருளாதார ரீதியாக வெற்றியடைவில்லை என கூறப்படுகிறது.

திருத்தனி முருகன் கோயில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணியசாமி திருக்கோயிலுக்கு ஐஸ்வர்யா இன்று வருகை தந்தார். மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்த ஐஸ்வர்யாவிற்கு திருக்கோயில் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோயிலில் அமர்ந்து அவர் சிறிது நேரம் தியானம் செய்தார். ஐஸ்வர்யாவின் திடீர் வருகை காரணமாக, அவர் மீண்டும் புதிய திரைப்படத்தை இயக்குவதற்கான பணிகளை துவங்கியிருக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்... மிகக் கனமழை கொட்டும் என அறிவிப்பு!

அதிர்ச்சி... பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்... பதற்றத்தில் என்ஐஏ அலுவலகம்... தீவிர விசாரணை!

சவுக்கு சங்கரை விடாதீங்க... கள்ளக்குறிச்சி மாணவி தாய் போலீஸில் பரபரப்பு புகார்!

வடமாநிலங்களில் புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள்... கங்கை, யமுனை கரைகளில் குவிந்த மக்கள்!

பிரியாவிடை பெற்றார் தினேஷ் கார்த்திக்... வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE