கையில் கட்டுடன், கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்!

By ச.ஆனந்த பிரியா

கையில் மாவுக்கட்டுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட வீடியோ ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.

பிரான்சில் 77வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. கடந்த மே 14ம் தேதி தொடங்கிய இந்த விழாவில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு ரெட் கார்ப்பெட்டை அலங்கரித்து வருகின்றனர். இதில் வருடா வருடம் நடிகை ஐஸ்வர்யா ராயும் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் அணியும் வித்தியாசமான உடைகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும்.

ஐஸ்வர்யா ராய்

இந்த வருடமும் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன் தினம் இரவு மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார் ஐஸ்வர்யா ராய். கையில் கட்டுடன் தனது மகள் ஆராத்யா உதவியுடன் சென்ற ஐஸ்வர்யா ராயைப் பார்த்த ரசிகர்கள் பதறினர். இது சிறு காயம் தான் என ஐஸ்வர்யா தரப்பு ரசிகர்களை ஆறுதல் படுத்தியது.

இன்று கையில் கட்டுடனேயே ரெட் கார்ப்பெட்டில் கலந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். கருப்பு நிறத்திலான நீண்ட கவுனில் வெள்ளை நிற பஃப் வைத்த கையுடன் நடந்து வந்திருக்கிறார் ஐஸ்வர்யா. ரெட் கார்ப்பெட்டில் படியேறி கட்டுப் போட்ட கையில் சலாம் வைத்தவரைப் பார்த்து இணையத்தில் ரசிகர்கள் ஆர்பரித்து வருகின்றனர்.

இந்த வருடம் ரெட் கார்ப்பட்டிலேயே அழகி ஐஸ்வர்யா தான் என்றும், கையில் காயம் இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது, ஐஸ்வர்யா ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளார் என்றும் கூறி வருகின்றனர். கனமான அந்த நீண்ட உடையணிந்து ரெட் கார்ப்பெட்டில் ஐஸ்வர்யா நடப்பதற்கு சிரமப்படுவது வெளிப்படையாகத் தெரிந்தாலும் முகத்தில் புன்னகையுடன் இந்த வருடமும் தவறாமல் கேன்ஸ் ரெட்கார்ப்பெட்டை அலங்கரித்திருக்கிறார் உலக அழகி.

இதையும் வாசிக்கலாமே...


தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

என் கணவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது... முதல்வர் தனிப்பிரிவில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி மனு!

மீண்டும் சர்ச்சையில் டிடிஎப் வாசன்... கார் ஓட்டி அட்ராசிட்டி!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு... மேலும் குறையுமா?!

சென்னையில் இருந்து கப்பலில் அனுப்பப்பட்ட 27 டன் வெடிபொருட்கள்... துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அரசு அனுமதி மறுப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE